சூர்யாவின் 27 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை.. சூப்பர் போஸ்டர் வெளியீடு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் ஆனதையடுத்து சூப்பர் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்த ’நேருக்கு நேர்’ என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சூர்யா அறிமுகம் அறிமுகமானார் என்பதும் அவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில், தேவா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆனதை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யாவின் 27 ஆண்டுகால திரையுலக வாழ்வை குறிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ’சூர்யா 44’ படத்தின் போஸ்டர் என்பதும் அட்டகாசமாக பைக் ஓட்டி வரும் சூர்யாவின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..
A journey of determination that began with #NerrukkuNer has reached another milestone ❤️🔥#27YearsOfSuriya #27YearsOfSuryaism
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 6, 2024
Here's our wishes and love for completing 27 years #Suriya sir. Wish you more accolades and outstanding success 💖
From Team #Suriya44#LoveLaughterWar… pic.twitter.com/r5uuuDnDJz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com