அமெரிக்க தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 27 பேர் பரிதாப பலி

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சமீபத்தில் தீவிரவாதி ஒருவன் வாகனம் மூலம் பாதசாரிகளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அமெரிக்க மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள புகழ் பெற்ற சர்ச் ஒன்றில் திடீரென புகுந்த மர்மநபர் அங்கு வழிபாடு நடத்தி கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த கொடூர சம்பவத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தர்வர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

துப்பாக்கி சூடு நடந்த்திய மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தற்போது ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

More News

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அவள், விழித்திரு படங்களின் ஓப்பனிங் வசூல் எப்படி?

கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தின் 'அவள்' மற்றும் தன்ஷிகாவின் 'விழித்திரு' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

கனமழையிலும் கலெக்சனில் களைகட்டிய தளபதியின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கும் வசூலை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை: ரசிகர்களிடையே கமல் ஆவேச பேச்சு

தமிழக நலன்களுக்காக நான் என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இங்குள்ள கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று நான் கருதுகிறேன்.

உலகில் முதல்முறையாக விஷால் எடுத்திருக்கும் ''V Shall' என்ற புதிய முயற்சி

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் நலிந்த நடிகர், நடிகையர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது தெரிந்ததே.