27 இளைஞர்களை திருமணம் செய்த இளம்பெண்… இரவோடு இரவாக மாயமான சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

காஷ்மீர் பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன சில நாட்களிலேயே காணாமல் போயிருக்கிறார். இதையடுத்து அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதேபோன்று அந்த இளம்பெண் மீது 12 இளைஞர்கள் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வசித்துவரும் இளைஞரான முகமது அல்தப் மார் என்பவர் புரோக்கர் மூலமாக பெண் தேடி கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜுலை 5 ஆம் தேதி அந்த பெண் திடீரென பணம் நகைகளுடன் வீட்டை விட்டு மாயமாகி இருக்கிறார். இதனால் அதிர்ந்து முகமது அல்தப் மார், புட்காம் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் இளைஞர் முகமது அல்தப்பைத் தவிர அதே இளம்பெண் மீது 12 இளைஞர்கள் புகார் அளித்திருப்பதும் அவர்கள் எல்லோரும் தங்களது மனைவியைக் காணவில்லை என்றே புகார் அளித்திருப்பதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் தீவிர விசாரணை நடத்திய போலீசார் ராஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷாஹீன் அக்தர் என்பவர் பெரிய கும்பலுடன் சேர்ந்து கொண்டு 27 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் அந்த பெண்ணின் கணவர் உறவினர்களின் உதவியுடனே மற்ற இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

இப்படி திருமணம் செய்துகொள்ளும் அவர் பெரும்பாலான திருமணங்களில் வெறும் 20 நாட்கள் மட்டும் வாழ்ந்துவிட்டு பின்னர் அவர்களை விட்டு, இரவோடு இரவாக ஒடிவந்துள்ளார். ஓடிவரும்போது அந்த வீட்டில் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புடகாம் பகுதியில் மட்டும் அந்த இளம்பெண் 12 இளைஞர்களை திருமணம் செய்த நிலையில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஷாஹீம் அக்தர் மொத்தம் அவர் 27 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் பணம் நகைக்காக பெரிய கும்பலைச் சேர்ந்துகொண்டு இதுபோன்ற முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அந்த கும்பலை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல் கூறப்படுகிறது.