கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்களின் பரிதாப முடிவு

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மது அருந்தலாம் என்ற வதந்தியை நம்பி ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக இந்தியா உள்பட உலகின் 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கியதால் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒருபக்கம் உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒன்று மது அருந்தினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்பது தான். இதனை நம்பி ஈரானில் சுமார் 200 பேர்களுக்கும் மேல் கள்ளச்சாராயம் குடித்ததாக தெரிகிறது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணமடைந்தார்கள் என்றும் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவதுள்ளது. அவர்கள் குடித்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்ததே இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மது அருந்தினால் கொரோனா தாக்காது என்பதற்கு எந்தவிதமான அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் இந்த வதந்தியை நம்பி யாரும் மது அருந்த வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

More News

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

அசுரன், பட்டாஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து தனுஷ் தற்போது 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

கொரோனா இருக்கட்டும்.. பெங்களூரில் 6 பேருக்கு காலரா..!

விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவின் மூலம் மனிதர்களுக்கு காலரா நோய் ஏற்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் இந்த பாக்டீரியாவானது மனிதர்களின் உடலுக்குள் செல்லும்

'வருகிறார் வாத்தி': 'மாஸ்டர்' படத்தின் புதிய அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன

மலேசிய அமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

மலேசியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் அரசு பதவிகள் உள்பட முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மங்களூரில், மருத்துவமனையிலிருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..!

அவருக்கு காயச்சல், இருமல் இருந்தது தெரியவர அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.