கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்களின் பரிதாப முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மது அருந்தலாம் என்ற வதந்தியை நம்பி ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக இந்தியா உள்பட உலகின் 97 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கியதால் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஒருபக்கம் உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. அவற்றில் ஒன்று மது அருந்தினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்பது தான். இதனை நம்பி ஈரானில் சுமார் 200 பேர்களுக்கும் மேல் கள்ளச்சாராயம் குடித்ததாக தெரிகிறது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணமடைந்தார்கள் என்றும் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவதுள்ளது. அவர்கள் குடித்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்ததே இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மது அருந்தினால் கொரோனா தாக்காது என்பதற்கு எந்தவிதமான அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் இந்த வதந்தியை நம்பி யாரும் மது அருந்த வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments