26 வயது ஆபாச நடிகை திடீர் மரணம்.. 3 மாதங்களில் அடுத்தடுத்து 4 நடிகைகள் மறைவு..!
- IndiaGlitz, [Sunday,March 10 2024]
2024ஆம் ஆண்டில் ஏற்கனவே மூன்று ஆபாச நடிகைகள் மரணமடைந்த நிலையில் தற்போது 26 வயது அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகையும் மர்ம மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 26 வயது சோபி லியோன் என்பவர் ஆபாச படங்களில் நடித்து ஏராளமான பணம் சம்பாதித்து வந்த நிலையில் திடீரென அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
18 வயது முதல் அவர் ஆபாச படங்களில் சோபி லியோன் நடித்து வருகிறார் என்றும் கடந்த 9 ஆண்டுகளில் அவர் ஒரு மில்லியன் டாலர் வரை சம்பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் தனது வீட்டில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அவரது வளர்ப்பு தந்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில் கேக்னே லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தாய்னா ஃபீல்ட்ஸ் ஆகிய ஆபாச நடிகைகள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் தற்போது நான்காவது நடிகையாக சோபி லியோன் என்பவரும் மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.