56 வயது ஹீரோவுக்கு மனைவியாக நடித்தது ஏன்? 26 வயது நடிகை விளக்கம்..
Send us your feedback to audioarticles@vaarta.com
56 வயது ஹீரோவுக்கு மனைவியாக 26 வயது நடிகை நடித்த நிலையில் அந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி உள்ள நிலையில் இதுகுறித்து அந்த நடிகை விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான ’சாம்ராஜ் பிருத்விராஜ்’ என்ற இந்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மானுஷி ஷில்லார் நடித்துள்ளார்
56 வயதாகும் அக்ஷய்குமாருக்கு 26 வயதாகும் மானுஷி ஷில்லார் மனைவியாக நடித்தது குறித்து கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்
எனக்கும் அக்ஷய் குமாருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருப்பது உண்மைதான், அவருடைய மனைவியாக நான் நடித்தது குறித்து கேலி செய்வதை நானும் பார்த்தேன், அக்ஷய் குமார் போன்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது யார் வேண்டாம் என்று நிராகரிப்பார்கள்?
மேலும் அக்ஷய்குமார் மனைவியாக நடிக்க வேண்டும் என்று நன்றாக யோசித்து தான் படக்குழுவினர் என்னை தேர்வு செய்தார்கள். மேலும் அக்ஷய்குமார் உடன் நான் நடிக்கும்போது வயது வித்தியாசம் எனக்கு தெரியவில்லை, ஜாலியாக அவருடன் சேர்ந்து பணியாற்றினேன் என்று தெரிவித்தார். அவரது இந்த விளக்கம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நம்மூரிலும் கமல், ரஜினி உடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு 30 வயதுக்கும் மேல் வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout