'அருணாச்சலம்' ரிலீஸாகி 26 வருடங்கள்.. படத்தில் நடிக்காத குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ திரைப்படம் வெளியாகி 26 வருடங்களை நிறைவு பெற்றதை அடுத்து அந்த படத்தில் நடிக்காத குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் ரம்பா நடிப்பில் உருவான ’அருணாச்சலம்’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார் என்பதும் கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான இந்த படம் நேற்றுடன் 26 வருடங்களை பூர்த்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது ’ஒவ்வொரு இயக்குநருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கும், எனது கணவர் சுந்தர் சி மிகவும் அதிர்ஷ்டமானவர் என்பதால் அவர் ரஜினிகாந்த் படத்தை 27 வயதிலேயே இயக்கும் வாய்ப்பை பெற்றார் என்று தெரிவித்துள்ளார். 26 வருடங்கள் என்ற மைல்கல்லை அருணாச்சலம் பெற்றுள்ளது, அதற்காக எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பூ சமீபத்தில் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி விட்டதாகவும் தற்போது முழு ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.