ஒரே குடும்பத்தில் 26 பேருக்கு கொரோனா! ஏரியாவையே மடக்கிய போலீஸ்

  • IndiaGlitz, [Sunday,April 19 2020]

டெல்லியின் ஜஹாங்கிர்புரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த குடும்பம் இருந்த ஏரியாவையே டெல்லி போலீசார் கட்டுப்படுத்தும் பகுதியாக அறிவித்துள்ளனர். இதனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1707ஆகவும், கொரோனாவால் 42 பேர் பலியாகியும் இருக்கும் நிலையில் நேற்று டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஏற்கனவே 68 மண்டலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜஹாங்கிர்புரி மண்டலமும் 69வது மண்டலமாக இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மண்டலங்களாக 8 மண்டலங்கள் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

More News

அமெரிக்காவில் மனிதர்கள்மீது பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலவரம்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் &

தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு பாசிட்டிவ்? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்!!! மகிழ்ச்சித்தரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகள்!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சையில் தற்போது புதிய திருப்பத்தைக் கண்டுள்ளதாக மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கிறது.

24 மணி நேரத்தில் 991 பேருக்கு பாசிட்டிவ்: ஊரடங்கையும் மீறி இந்தியாவில் பரவும் கொரோனா

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை நீடிக்கும்

கொரோனா ஊரடங்கால் 15 வருடங்கள் கழித்து இணைந்த தாயும் மகனும்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் மகனும் கொரோனா ஊரடங்கால் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது