ஓடிடியில் வெளியாகவுள்ள மணிரத்னத்தின் 26 திரைப்படங்கள்: பணிகள் மும்முரம்!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’ ’அக்னி நட்சத்திரம்’ ’தளபதி’ ’ரோஜா’ உள்பட மொத்தம் இதுவரை அவர் 26 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும், மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவரது 27 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாகவும் இது குறித்த பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் மணிரத்னம் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம்பிரபு, ஜெயராம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More News

மறைந்த நடிகர் விவேக்கிற்கு மத்திய அரசு செய்ய போகும் மரியாதை!

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது 

படுக்கை காலி இல்லாததால் ஆம்புலன்ஸில் உயிரிழந்த 16 மாத குழந்தை: பெற்றோர் கதறலின் பரிதாப வீடியோ!

மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்பதால் 16 மாத குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த அந்த குழந்தை பரிதாபமாக

சமரச பேச்சுவார்த்தை என்ன ஆச்சு? மீண்டும் நீதிமன்றம் செல்லும் 'இந்தியன் 2' வழக்கு!

'இந்தியன் 2' படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் இறந்தவர் உடலை வாங்க மறுக்கும் உறவுகள்...! உதவிக்கரம் நீட்டும் இஸ்லாமிய அமைப்புகள்...!

கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்ததால், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் உடல்களை அடக்கம் செய்து வருகின்றன.

மயிலாடுதுறை பேரூராட்சி பகுதியில் நாளை 144 தடை உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பேரூராட்சி பகுதிகளில் நாளை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அம்மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.