கொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர்!!! 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக முதல்வர் அதிக முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில் திட்டங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து உள்ளார். அந்த வகையில் தற்போது ரூ.25 ஆயிரத்து 213 கோடி முதலீட்டில் புதிய 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். இதனால் மேலும் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் எனக் கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிக்களுக்கான உயர்மட்டக் குழுவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு புதிய 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மேலும் ரூ.25,213 கோடி அளவுக்கான முதலீடுகள் கிடைக்கப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய முதலீடுகளின் வாயிலாக தமிழகத்தில் 49 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக 2 ஆவது முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MRF நிறுவனத்துடன் 3,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு கையெழுத்திட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்நிறுவனம் பெரம்பலூர், அரக்கோணம், திருவெற்றியூர் ஆகிய இடங்களில் அவர்களது தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ராம்ராஜ் (Enes Textile Mills) நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், seoyon E-HWA Automotive India private Limited நிறுவனத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி திட்டங்களுக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
Kyungshin industrial motherson private limited நிறுவனத்தின் மோட்டர் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் வாகன டயர்கள் உற்பத்தி திட்டம், வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், Ather Energy நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் 1000 கோடி செலவில் இன்டர் கிரேட்டர் சென்னை பிசினஸ் பார்க் நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் தொடங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப் படும்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில் தொழிலதிபர்களை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருகிறார். மாநகரங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பின் தங்கியிருக்கும் பல பகுதிகளிலும் முன்னணி தொழில் நிறுவனங்களை உருவாக்கி அங்குள்ளோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பல திட்டங்களையும் தமிழக அரசு உருவாக்கி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments