ஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 26 நோயாளிகள் உயிரிழந்த அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்கவே ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அடுத்து செங்கல்பட்டு, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, நேற்று திருப்பதி என கூட்டம் கூட்டமாக கொரோனா நோயாளிகள் அதுவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று கோவா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. கோவா மாநிலத்தின் பாம்போலிம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் இதையடுத்து அதிகாலை 6 மணிக்குள் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
150 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பாம்போலிம் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பது குறித்து விசாரணை நடத்த தற்போது அம்மாநில முதல்வர் பிரமோத் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதே மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் லாரியில் இருந்து ஆக்சிஜன் வாயுவை சப்ளை செய்யும்போது வாயுக்கசிவு ஏற்பட்டு அந்த வட்டாரமே வெள்ளைப்புகை மண்டலமாக மாறிய அவலமும் நிகழ்ந்து உள்ளது.
இந்தியா முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும் கொரோனா நோயாளிகளும் மேலும் பீதி அடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments