எனக்கு 50...உனக்கு 25......! காதல் வித்தையால் அத்தையை மடக்கிய அத்தான்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மருமகனை திருமணம் செய்துகொண்ட, 50 வயது பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், முஸாபர்நகரில் வசித்து வருபவர்தான் 2 பேரக் குழந்தைகளுடைய, 50 வயதான பாட்டி. இவர் தன்னை விட பாதி வயது, ஆதாவது 25 வயது குறைவுள்ள மருமகனை காதலித்து வந்துள்ளார். அவரும் இதற்கு ஒத்துக்கொள்ள, இந்த கள்ளக்காதல் குடும்பத்தினர் மத்தியில் பெரும் இடியாக வந்து விழுந்தது. இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 10 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, வேறொரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். தங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்து, கடந்த புதனன்று வீட்டுக்கு திரும்பியுள்ளது இந்த கள்ளக்காதல் ஜோடி. குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தாங்கள் திருமணம் பதிவு செய்து கொண்டோம், ஒன்றாகத்தான் வாழ்வோம், என்று கூறியுள்ளனர். இதையடுத்து பெரிய சண்டையே நடக்க, ஊர்க்காரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்க, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விசாரணை செய்த போலீசார் இந்த திருமணத்தை ஏற்க முடியாது என்றும், பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின் மருமகன் மற்றும் மாமியாரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com