25வது வெற்றி நாள் கொண்டாடிய பேட்ட-விஸ்வாசம் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,February 03 2019]

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெறுவது அரிதாகவே நடந்து வரும் நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளீயான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் தற்போது 25வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது.

திரைப்படம் வெளியான ஒரே நாளில் போலியான சக்சஸ் விழா கொண்டாடுபவர்களின் மத்தியில் உலகம் முழுவதும் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்கள் ரூ.200 கோடி அளவில் வசூல் செய்திருந்த போதிலும், அந்த வெற்றியை கருத்தில் கொள்ளாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினி ரசிகர்ளும், அஜித் ரசிகர்களும் இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் 25வது நாள் வெற்றி விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதேபோல் ஒரே நாளில் வெளியான 'ராட்சசன்' மற்றும் '96' ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினியின் அடுத்த பட கெட்டப் இதுதானா?

ரஜினியின் '166'வது படமான இந்த படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும்...

மீண்டும் இணைந்த சிம்பு-தனுஷ்

கோலிவுட் திரையுலகில் தொழில்ரீதியில் போட்டியாக உள்ள நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதை எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

அதிகாரிகளின் முடிவு மிருகத்தனமானது: ஜிவி பிரகாஷ் கருத்து

ஊருக்குள் புகுந்த காட்டு யானையான சின்னத்தம்பியை கடந்த 25-ந்தேதி லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வரகளியாறு வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் விட்டனர்.

ஆர்.ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' டிரைலர் விமர்சனம்

காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'எல்.கே.ஜி. திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'SK 13' பர்ஸ்ட்லுக் இதுதான்

சிவகார்த்திகேயனின் 13வது படமான SK 13' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.