close
Choose your channels

25 வயதில் சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள்..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வரும் நடிகர் ஒருவர் 25 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது சின்ன திரை உலக நட்சத்திரங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், ஹிந்தி சீரியல் உட்பட பல மொழிகளில் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருபவர் பவன் சிங். இவர் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் ஹிந்தி சீரியலில் நடித்து வருவதால் மும்பைக்கு வீட்டை மாற்றியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் 25 வயதே ஆகியுள்ள நிலையில் திடீரென நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் மற்றும் ஹிந்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில தமிழ் சீரியல்களிலும் பல ஹிந்தி சீரியல்களில் நடித்த நடிகர் பவன் சிங், 25 வயதில் எப்படி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று சின்னத்திரை நட்சத்திரங்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்த வயது உள்ளவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து வருவது அதிகரித்து உள்ள நிலையில் பவன் 25 வயதில் நடிகர் பவன் சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment