25 ஆண்டு திருமண வாழ்க்கை: பில்கேட்ஸ் மனைவி பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நேற்று தனது மனைவி மெலிண்டாவுடன் 25வது திருமண நாளை கொண்டாடினார். கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பில்கேட்ஸ்-மெலிண்டா திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பில்கேட்ஸ் வயது 39, மெலிண்டாவின் வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது 25வது திருமண நாள் குறித்து மெலிண்டா பில்கேட்ஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டபோது, 'இந்த 25 வருடங்களில் மூன்று குழந்தைகளுடன் இனிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னுடைய புன்னகை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னும் 25 வருடங்களுக்கு நம்முடைய மகிழ்ச்சி தொடர வேண்டும் என விரும்புவதாக பில்கேட்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர தம்பதிக்கு சமூக வலைத்தள பயனாளிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy anniversary, @BillGates! Twenty-five years and three kids later, we’re still laughing this hard. pic.twitter.com/ZPw2crmw6i
— Melinda Gates (@melindagates) January 1, 2019
Happy anniversary, @melindagates. I can’t wait to spend 25 more years laughing together. https://t.co/LMJ126c3ua
— Bill Gates (@BillGates) January 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com