எய்ம்ஸ்-இல் எம்பிபிஎஸ் படித்த 25 வயது டாக்டர் கொரோனாவுக்கு பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த 25 வயது இளம் டாக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சோலங்கி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் படிப்பான எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் திடீரென கொரோனா வைரஸ் தாக்கியதை அடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால் அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் படித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவருடைய சீனியர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விகாஸ் சோலங்கி நேற்று மரணமடைந்துவிட்டார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் சக டாக்டர்கள் கூறியபோது, ‘விகாஸ் சோலங்கி மிகவும் சுறுசுறுப்பான நபர் என்றும் பல கனவுகளுடன் அவர் எம்பிபிஎஸ் முடித்தார் என்றும் அவரது மறைவை ஜீரணிக்கவே முடியவில்லை என்றும் தெரிவித்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்த இளம் டாக்டர் ஒருவர் கொரொனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments