விக்ரம், இலியானா, ஹாரீஸ் ஜெயராஜ் படத்தில் திடீரென சூர்யா வந்தது எப்படி?

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

சியான் விக்ரம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக இலியானாவும் அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கவும் முடிவு செய்து இருந்த நிலையில் திடீரென இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக முடிவு செய்யப்பட்டதாக இயக்குநர் விக்ரம் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தத படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குனர் விக்ரம்குமார் சமீபத்தில் பேட்டியளித்த போது ’24’ திரைப்படத்தின் திரைக்கதை முதலில் விக்ரமுக்காக எழுதப்பட்டதாகவும் அந்த படத்தில் இலியானா நடிக்க உறுதி செய்யப்பட்டதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால் திடீரென அந்த படம் உருவாகவில்லை என்றும், அப்போதுதான் ’மனம்’ படத்தை பார்த்த சூர்யா, அந்த படத்தை சிவகுமார், கார்த்தி, ஜோதிகா ஆகியோர்களுடன் இணைந்து ரீமேக் செய்யலாம் என்று தன்னிடம் கூறியதாகவும் விக்ரம்குமார் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு முன் ‘24’ கதையை சூர்யாவிடம் கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதால் உடனே அதை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் விக்ரம்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் 24 படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும், சூர்யாவிடம் இதுகுறித்து தான் பேசி வருவதாகவும் விக்ரம்குமார் அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மேலும் ஒரு தமிழக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல் 

கொரோனோ வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை ஜாதி மத இன வேறுபாடின்றி தாக்கி வருகிறது என்று தெரிந்ததே.

கொரோனா சிகிச்சை மருந்து: கல்லாக்கட்டும் ரஷ்யா!!!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதுவரை முறையான மருந்துகள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எனக்கு பிடிக்காத பாடல்: மனம் திறந்த கமல்ஹாசன்

நேற்று உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆன்லைன் மூலம் உரையாடினர் என்பதும் இந்த உரையாடலில் ரசிகர்கள் அறியாத பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

பாரதிராஜாவின் வலதுகரமாக இருந்த ஒளிப்பதிவாளர் மறைவு: திரையுலக பிரமுகர்கள் இரங்கல்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் பாரதிராஜா இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவருமான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69

கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அஃப்ரிடிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.