ஆக்சிஜன் தட்டுப்பாடு… ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிரைவிட்ட துயரச் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுக்க நேற்று 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கு நடுவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சர்கங்கா ராம் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் காம்ராஜ்நகர் பகுதியில் உள்ள மருததுவமனை ஒன்றில் நேற்று மாலை சிகிச்சைப் பெற்றுவந்த 24 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர். இதில் கொரோனா நோயாளிகளைத் தவிர மற்ற நோயாளிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. காம்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்கனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்ததாகவும் இதனால் பெல்லாரியில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பெல்லாரியிலும் ஆக்சிஜன் ஸ்டாக் இல்லாத காரணத்தால் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 24 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து முதல்வர் எடியூரப்பா மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருடன் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ராகுல் காந்தி அவர்கள் “இறந்தனரா? அல்லது கொல்லப்பட்டனரா?” எனத் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தற்போது இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் நோயாளிகள் அவதியுற்று வருவதும் உயிரிழந்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
Died or Killed?
— Rahul Gandhi (@RahulGandhi) May 3, 2021
My heartfelt condolences to their families.
How much more suffering before the ‘system’ wakes up? pic.twitter.com/JrfZbIo7zm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments