'24' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

  • IndiaGlitz, [Monday,April 11 2016]

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த '24' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்று முன் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் '24' பாடல்கள் இன்று முதல் அனைத்து எப்.எம் வானொலிகளில் தெறிக்க போகிறது.


இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரே நாளில் '24' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகுவதால் சூர்யாவின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். சயிண்டிஃபிக் த்ரில்லர் படமான இந்த படத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன், க்ரிஷ்ஹ் கர்நாட், அஜய், சரண்யா, சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.