தமிழகத்தில் இன்றும் நாளையும் முழு போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் மே10 ஆம் தேதி காலை 4 மணிமுதல் மே 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இன்றும் நாளையும் தமிழகத்தில் 24 மணிநேரமும் பேருந்து சேவை தொடரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதால் இன்றும் நாளையும் காலை 6-9 மணிவரை அனைத்துக் கடைகளும் இயங்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த இரு தினங்களில் மட்டும் கொரோனா விதிமுறைகள் அமலில் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது முந்தைய விதிமுறைகளின்போது அனுமதியளிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே. ஏற்கனவே திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு போட்டபட்ட கட்டுப்பாடுகள் மட்டும் இந்த இரு தினங்களில் தொடர்ந்து அமலில் இருக்கும்.
மே10-24 முழு ஊரடங்கு விதிமுறைகளில் முக்கியமான ஒன்று, ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு வரும் நபர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து வந்து செல்லலாம். இந்த அனுமதி திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்யாவசியமான சேவைகளுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பழைய இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படுமா? என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. பழைய இ-பாஸ் நடைமுறை பின்பற்றப் படாவிட்டாலும் இ-பதிவு எனும் ஒரு முறை பின்பற்றப்படும் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.