தமிழகத்தில் இனி 24 நேரமும் கடை திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

தமிழகத்தில் இனி இரவு, பகல் என பேதமின்றி 24 மணி நேரமும் கடைகள், தொழிற்சாலைகள் இயங்கும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடைகள், தொழிற்சாலைகள் அனைத்து நாட்களும் அதாவது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பணியாளரை எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும், சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும், ஓவர்டைம் என்றால் அதிகபட்சம் 10.30 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும், பெண் பணியாளர்கள் இரவில் வீட்டுக்கு செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையால் இனி 24 மணி நேரமும் திரையரங்குகளும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தற்கொலையை படுகொலை என்று கூறிய ரஞ்சித்: கொந்தளித்த நெட்டிசன்கள்

நேற்று நீட் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை எழுதிய சுமார் 50ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு பாலத்தையே ஆட்டைய போட்டுட்டாங்களா? ஒரு அதிர்ச்சி தகவல்

இதுவரை பணம், நகைகள் தான் கொள்ளை போவதை பார்த்திக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம், வடிவேலு ஒரு படத்தில் 'என் கிணத்தை காணோம்' என்று காமெடிக்கு சொல்வதையும் பார்த்திருக்கின்றோம்.

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாகிய நடிகர் சந்தானம், ஹீரோவாகவும் வெற்றி பெற்று முன்னேறி வருகிறார்.

சிம்புவின் 'மாநாட்டில்' இணைந்த பிரபல இசையமைப்பாளர்

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது

பேட்மிண்டன் வீராங்கனையை காதலிப்பது உண்மையா? விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த இரண்டு செல்பி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.