4வது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பரபரப்பு

தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கில் மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தொட்டு, தற்போது கடந்த மூன்று நாட்களாக இரண்டாயிரத்தை தாண்டி வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,641 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 38 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1045 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து 31.316 பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

கொரோனா நோயாளிகளுக்கு தியான சிகிச்சையா??? அசத்தும் தமிழகம்!!!

கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் நலம் மட்டுமல்ல மனநலமும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதில் தமிழகம் கவனமாக இருக்கிறது.

வீட்டுக்குள்ளேயே 40 கிமீ சைக்கிளில் ரைடு செய்த தமிழ் ஹீரோ

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் வீட்டின் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

திருநங்கையுடன் வாலிபருக்கு காதல்: திடீரென தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

30 வயது திருநங்கையை ஆசை ஆசையாய் காதலித்த 26 வயது வாலிபர் ஒருவர் திடீரென திருநங்கை காதலியுடன் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

விஷாலின் 'சக்ரா' படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

விஷால் நடித்த அயோக்யா' மற்றும் 'ஆக்சன்' ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்துள்ள 'துப்பறிவாளன் 2' மற்றும் 'சக்ரா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியிட

சீனாவின் திட்டத்தை சுக்கு நூற்றாக்கிய இந்தியா!!! பேசிக்கொண்டே காரியத்தை முடித்த சாதுர்யம்!!!

நேற்று நள்ளிரவில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.