இன்றும் 200க்கும் மேல் தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாகவும் நேற்று 200க்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 231 பேர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனா பாதித்த 231 பேர்களில் 174 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1257ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து அரியலூரில் 18 பேர்களும், காஞ்சிபுரத்தில் 13 பேர்களும், திருவள்ளூரில் 7 பேர்களும், செங்கல்பட்டில் 5 பேர்களும், கடலூரி, நீலகிரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், கோவை, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளதால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 10,049 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1,30,132 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

More News

இதுதாண்டா மரண மாஸ்க்!

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால்

பிக்பாஸ் தமிழ் நடிகை பாடிய முதல் பாடல்: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புது வரவு ஹுண்டாய் வெர்னா!!! எப்படியிருக்கும்???

டீசல் கார்களில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டாய் நிறுவனம் தற்போது தனது வரவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கொரோனா: சுவீடன் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை!!! காரணம் என்ன???

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கைப் பிறப்பித்து கடும் பொருளாதார மந்தத்தைச் சந்தித்து வருகின்றன

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி!

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது