'தளபதி 69' படத்தின் நாயகி 23 வயது இளம் நடிகையா?

  • IndiaGlitz, [Monday,August 05 2024]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 69’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இயக்குனர் எச் வினோத் தேர்வு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ‘பிரேமலு’ திரைப்படத்தில் நடித்த மமிதா பாஜூ ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகளுக்கு அசைந்து உள்ளது.

ஏற்கனவே தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற திரைப்படத்தில் மமிதா பாஜூ நடித்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக அவர் இந்த நடிக்கப் போகிறாரா அல்லது வேறொரு முக்கிய கேரக்டரில் நடிக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் 23 வயது மமிதா பாஜூ, ‘தளபதி 69 ’படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மமிதா பாஜு தமிழில் விஷ்ணு விஷால் படத்திலும், பிரதீப் ரங்கநாதன் படத்திலும் அதர்வா படத்திலும் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் ‘தளபதி 69’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் விஜய் கேரக்டரின் ஃபோட்டோஷூட் சமீபத்தில் நடந்துள்ளதாகவும் வித்தியாசமான கெட்டப்பில் விஜய் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.