169 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிவறை… எதுக்கு இத்தனை காஸ்ட்லி தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது. அப்படி அனுப்பப்பட்ட பொருட்களில் ஒரு பொருள் மட்டும் உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளையும் வியக்க வைத்திருக்கிறது. அது என்னவெனில் 23 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.169 கோடி) மதிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் கழிப்பறை.
விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஜீரோ க்ரேவிட்டி முறையில் இந்தக் கழிப்பறை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இத்திட்டம் முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில் மேலும் சில கழிப்பறைகளை விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்க நாசா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. விண்வெளியில் கிரேவிட்டி இருக்காது. அந்நிலையில் பயன்படுத்துவதற்கு என்றே விஷேஷ முறையிலான சில பொருட்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
அப்படி உருவாக்கப்பட்டதுதான் ஜிரோ கிரேவிட்டி கழிப்பறை. இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி கல்பனா சாவ்லா பெயர் கொண்ட அமெரிக்காவின் விண்கலன் கடந்த வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட இருந்தது. ஆனால் கவுண்டன் தொடங்கப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி 3 நிமிடத்தில் இத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் நேற்று மாலை வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவில் இருந்து இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விண்கலன் வரும் திங்கள் கிழமை விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் கழிப்பறை குறித்து கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பெண் விஞ்ஞானிகளுக்காக உருவாக்கப்பட்டது. பூமியில் இருப்பது போன்றே தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் பொதுக் கழிப்பறை வடிவில் இது உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments