கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்!

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 23 பேர் உயிரிழந்து உள்ளதாகப் ப்ளூம் பெர்க் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் தற்போது நம்பிக்கை அடிப்படையில் மக்களுக்கு வழங்கி வருகின்றன. முன்னதாக இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

தற்போது நார்வேயில் ஃபைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. காரணம் உயிரிழந்தவர்கள் அனைவரும் வயதானவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நார்வேயில் உயிரிழந்த 23 பேரின் உயிரிழப்புக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்பது இன்னும் நேரடியாக நிரூபணம் செய்யப்படவில்லை. ஆனால் அதில் 13 பேருக்கு இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிறிது நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் முதியவர்களுக்கு இத்தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நார்வேயில் தற்போது வரை 30,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதில் பலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டு கொண்டு வந்துள்ள பல நாடுகளுக்கு இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

More News

சொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் எனும் விவசாயி தன்னுடைய சொத்தை தன் இளைய மகனுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து விட்டார்.

என் தாய் எங்களுக்கு  சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்!

தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின்னர் 'காதல் கொண்டேன்'

சிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதை அடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிநடை

அடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா உலகம் முழுவதும் வெளியானது

நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற போகிறது என்பதும் 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் நாளை அறிவிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே