துப்பாக்கியை வைத்து செல்பி: தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் செல்பி மோகம் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதும் அபாயகரமான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிர்களை பல இளைஞர்கள் இழந்துள்ளனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 22 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியை வைத்து செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டு கொண்டதால் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டா என்ற பகுதியில் 22 வயது இளைஞர் நகுல்சர்ம்ச்ச். இவருக்கு அடிக்கடி செல்பி எடுக்கும் வழக்கம் உண்டு என்பதும் அந்த செல்பி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து லைக்குகளை அள்ளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நகுல்சர்மாவும் அவருடைய நண்பர்களும் காரில் ஒரு நண்பருடைய திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் அமர்ந்தபடி கைத்துப்பாக்கியை எடுத்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார். துப்பாக்கியுடன் அவர் விதவிதமான செல்பிகள் எடுத்து கொண்டிருந்தபோது தவறுதலாக அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதனை அடுத்து நகுல்சர்மாவை அவசர அவசரமாக அவருடைய நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது செல்பி மோகத்தால் 22 வயது இளைஞர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments