ஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்!

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் செய்த 22 வாலிபர் ஒருவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்ற 22 வயது இளைஞர் தன்னுடைய பக்கத்து வீட்டிலிருந்த நர்மதா என்பவரை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருந்ததை அடுத்து நர்மதா கர்ப்பமானார். இதனை அடுத்து நர்மதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனை வற்புறுத்த முதலில் திருமணம் செய்ய மறுத்த பூவரசன் பின்னர் திடீரென மாயமானார்.

இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து பூவரசன் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினர் முன்னிலையில் பூவரசன் - நர்மதா திருமணம் நடந்தது. இந்த நிலையில் திடீரென பூவரசனுக்கு கல்லூரி மாணவி தீபிகா என்பவருடன் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின்னரும் பூவரசன் தீபிகாவை காதலித்து வந்ததாகவும் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தீபிகா ஒரு முறை பூவரசனுக்கு போன் செய்த போது தற்செயலாக அதை நர்மதா எடுத்ததால் இருவருக்குமே பூவரசன் துரோகம் செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் திடீரென பூவரசன் மீண்டும் மாயமாகி தீபிகாவை திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது.

இதனை அடுத்து நர்மதாவும் அவருடைய உறவினர்களும் அளித்த புகாரின் அடிப்படையில் பூவரசன் மற்றும் தீபிகா கண்டுபிடிக்கப்பட்டு பூவரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீபிகாவுக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பூவரசன் தற்போது இருவருடனும் வாழ முடியாமல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

More News

'இந்தியன் 2' படத்தை கைவிடுகிறாரா ஷங்கர்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில்

சிங்கிளாக நிற்கும் சிங்கம்: மக்கள் மீதான நம்பிக்கையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, பாலாஜி, சுரேஷ் மற்றும் ஆஜித் ஆகிய ஐவர் உள்ளனர் என்பது தெரிந்ததே. இதில் ஆஜித் கைவசம் எவிக்சன் பாஸ் இருப்பதால்

30ஆம் தேதி வெளிவருமா? ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை

சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்ற செய்தியைப்

குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்!

குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த குடும்பத்தின் இளம்பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை

மத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு!!! ஆச்சர்யமூட்டும் தகவல்!!!

பொதுவா தண்ணீரே இல்லாமல் வறண்டு கிடக்கும் பகுதிக்குப் பெயர்தான் பாலைவனம். அதுவும் நம் இந்தியாவில் பெரிய பாலைவனமாகக் கருதப்படுவது தார் பாலைவனம்.