ஹெலிகாப்டர் ஷாட் மன்னனையே… ஆட்டம் காண வைத்த இளம் வீரர்? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே பிளே ஆப் நிலைக்குக் கூட தகுதிப் பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானது. மேலும் இந்த நிலைமைக்கு காரணம் தல தோனி மூத்த வீரர்களை மட்டுமே நம்புகிறார். இளம் வீரர்களை களம் இறக்கவே தயங்குகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த 14 ஆவது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் சென்னை சிஎஸ்கேவின் தேர்வு வேறுமாதிரியாக இருந்ததைப் பலரும் பார்க்க முடிந்தது. எப்போதும் போல முதலில் மூத்த வீரர்களை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே பின்பு கடைசி கட்டமாக சில இளம் வீரர்களையும் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் 22 வயதே ஆன ஆந்திர வீரர் ஹரிசங்கர் ரெட்டியை ஏலத்தில் எடுத்தத்தைப் பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சிஎஸ்கே குழு தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியான பயிற்சி ஆட்டம் ஒன்றில் 22 வயதே ஆன ஹரிசங்கர் ரெட்டி, ஹெலிகாப்டர் ஷாட் மன்னன் தல தோனியை ஆட்டம் காண வைத்து இருக்கிறார். அதாவது ஹரிசங்கர் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் பந்தை தூக்கி விளாசுகிறார். அந்தப் பந்து தோனியின் லெக் ஸ்டெம்பில் பட்டு அந்த ஸ்டெம்ப் பின்னர் தடுமாறி பல அடி தூரத்திற்கு சென்று விழுகிறது. இப்படி ஒரு காட்சியைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தோனி தேர்வு வீணாகவில்லை எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தல தோனியின் ஸ்டெம்பு தெறிக்கும் காட்சியை மட்டும் கட் செய்து அதை கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments