திருச்சி- 22 மாதக் குழந்தை சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விந்தை!

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

2021 ஆம் ஆண்டிற்கான இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் திருச்சியை சேர்ந்த 22 மாதமே ஆன குழந்தை சாய் தருண் இடம்பிடித்துள்ளார். இந்தக் குழந்தையைப் பார்த்த பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திருச்சியைச் சேர்ந்த பிரசாத், பவித்ரா தம்பதிகளின் ஆண் குழந்தை சாய் தருண். இவர் 10 மாதத்திலேயே பல பொருட்களின் பெயர்களை சரியாகச் சொல்லி பெற்றோர்களை நெகிழ வைத்திருக்கிறார். இதையடுத்து தனது குழந்தையின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என நினைத்த அந்த பெற்றோர்கள் குழந்தைக்கு பயிற்சி கொடுத்தன் மூலம் தற்போது இந்தியன் புக்ஸ் ஆஃப் ரொக்கார்டு புத்தகத்தில் சாய் தருண் இடம்பிடித்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கையென்றால் குழந்தை சாய் தருண் தலைவர்கள், உணவுப்பொருட்கள், ஆடை, உடல் பாகங்கள், பழங்கள், காய்கறிகள் என எந்தப் பொருளை கலைத்துப் போட்டாலும் வெறும் 30 வினாடிகளில் அதை எடுத்து Puzzle அட்டையில் சரியாக அடுக்கி வைத்து விடுகிறார். அதேபோல கேட்கும் கேள்விகளுக்கு தனது மழலை குரலில் பதில் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த 22 மாதக்குழந்தை இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் இந்தக் குழந்தை பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

யோகிபாபுவுக்கு நன்றி கூறிய விவேக் மகள்!

சமீபத்தில் நடிகர் விவேக் எதிர்பாராத மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் தற்போது அவரது மகள் நடிகர் யோகிபாபுவுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

சாதனை பெண் மாரல் யாஜர்லு உடன் மீண்டும் அஜித் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வந்த இளம்பெண் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்தார் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டியில் குவிந்த பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை மீனா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிளாமர் உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ஷாலினி பாண்டே... வைரல் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

ஜிபி முத்து பிக்பாஸ் செல்கிறாரா? அவரே அளித்த விளக்கம்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.