திருச்சி- 22 மாதக் குழந்தை சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விந்தை!
- IndiaGlitz, [Friday,September 24 2021]
2021 ஆம் ஆண்டிற்கான இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் திருச்சியை சேர்ந்த 22 மாதமே ஆன குழந்தை சாய் தருண் இடம்பிடித்துள்ளார். இந்தக் குழந்தையைப் பார்த்த பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த பிரசாத், பவித்ரா தம்பதிகளின் ஆண் குழந்தை சாய் தருண். இவர் 10 மாதத்திலேயே பல பொருட்களின் பெயர்களை சரியாகச் சொல்லி பெற்றோர்களை நெகிழ வைத்திருக்கிறார். இதையடுத்து தனது குழந்தையின் திறமையை வெளிக்கொணர வேண்டும் என நினைத்த அந்த பெற்றோர்கள் குழந்தைக்கு பயிற்சி கொடுத்தன் மூலம் தற்போது இந்தியன் புக்ஸ் ஆஃப் ரொக்கார்டு புத்தகத்தில் சாய் தருண் இடம்பிடித்துள்ளார்.
இதில் என்ன வேடிக்கையென்றால் குழந்தை சாய் தருண் தலைவர்கள், உணவுப்பொருட்கள், ஆடை, உடல் பாகங்கள், பழங்கள், காய்கறிகள் என எந்தப் பொருளை கலைத்துப் போட்டாலும் வெறும் 30 வினாடிகளில் அதை எடுத்து Puzzle அட்டையில் சரியாக அடுக்கி வைத்து விடுகிறார். அதேபோல கேட்கும் கேள்விகளுக்கு தனது மழலை குரலில் பதில் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த 22 மாதக்குழந்தை இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் இந்தக் குழந்தை பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.