சென்னை உள்பட 22 மாவட்டங்கள் அபாகரமானது: மத்திய அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,April 15 2020]
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட பட்டியல் ஒன்றில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அபாயகரமான மாவட்டங்கள் குறித்த பட்டியலை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துகுடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம் மற்றும் நாகை மாவட்டங்கள் அபாகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமே 38 மாவட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதில் 22 மாவட்டங்கள் அபாயகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்திய அளவில் ஐதராபாத், ஆக்ரா, லக்னோ, ஜெய்பூர், ஜோத்பூர், உள்ளிட்ட பல மாவட்டங்கள் அபாயகரமான மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.