தமிழகத்தில் முதல்முறையாக 2000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில் முதல்முறையாக 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி தமிழகத்தில் இன்று 2174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்று சென்னையில் கொரோனா பாதிப்பு 1000க்கும் குறைவாக இருந்த நிலையில் 1200ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 48 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 842 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து 27,624 பேர் மொத்தம் தமிழகத்தில் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் 25,463 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 773,707 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது