தமிழகத்தில் 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,070 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இன்றுதான் அதிகபட்ச கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 49 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து 28,641 பேர் மொத்தம் தமிழகத்தில் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் 26734 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 800,443 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது