3வது நாளாக தொடரும் 2000ஐ தாண்டிய பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சமீபத்தில் அது ஆயிரத்தை தொட்டது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்தை தாண்டி வரும் நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 41 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,630 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து 30,271 பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் மட்டும் பரிசோதனை ஏன்?  பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்துதா? கமல்ஹாசன் கேள்வி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே பரிசோதனை செய்து பிற மாவட்டங்களில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது

கொலையா? தற்கொலையா?: சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில்?

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்ட நிலையில்

உலகம் அழியும் நாள் எது??? மாயன் கணிப்பு என்ன சொல்கிறது???

உலக அழிவைப் பற்றி மனிதர்களுக்கு எப்போதும் உள்ளூற ஒரு அலாதியான ஈடுபாடு இருக்கிறதோ? என்னவோ? அச்செய்திகளை மட்டும் நாம் தொடர்ந்து கவனிக்கவே செய்கிறோம்.

ஊரடங்கில் வெளியே சுற்றினால் 5 ஆண்டு சிறை: மரண பீதியை ஏற்படுத்தும் நாடு!!!

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.

ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்: என்ன செய்தார்கள் மற்ற பயணிகள்?

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையிலும்