பாத்ரூமில் மர்மமாக மரணம் அடைந்த 21 வயது நடிகை: கணவரிடம் தீவிர விசாரணை!

  • IndiaGlitz, [Saturday,May 14 2022]

21 வயது நடிகை பாத்ரூமில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

கேரளாவை சேர்ந்த சஹானா என்ற நடிகை திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 21 வயதாகும் இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சஜ்ஜத் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவர் சஜ்ஜத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சஹானாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனை அடுத்து தனிக்குடித்தனம் செல்ல சஹானா கணவரை வலியுறுத்தியதாகவும் தெரிகிறது .

இந்த நிலையில் தனிக்குடித்தனம் சென்ற பின்னும் சஹானாவுக்கு தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லைபடுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று பாத்ரூமில் மர்மமான முறையில் சஹானா உயிரிழந்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர் .

சஹானா தற்கொலை செய்துகொண்டு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அவரது கணவரே கொலை செய்திருப்பார் என்றும் சஹானாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில் விசாரணையின் முடிவில் தான் சஹானாவின் மரணத்தின் மர்மம் விலகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சஹானா மறைவுக்கு கேரள திரையுலகினருக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.