விஜய்யால் ஏற்பட்ட போலீஸ் கனவு: ஒருநாள் அதிகாரியான மனவளர்ச்சி குன்றிய இளைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
21 வயது ஸ்டீபன் என்ற இளைஞர் மனவளர்ச்சி குன்றிய நிலையில் தளபதி விஜய் மற்றும் சுரேஷ்கோபி படங்கள் பார்த்ததின் விளைவால் தானும் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டார்.
பெற்றோருடன் கத்தார் நாட்டில் வசித்த இவர் சமீபத்தில் குடும்பத்தினர்களுடன் சென்னை வந்திருந்தபோது அவரது தந்தை ராஜீவன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் தனது மனவளர்ச்சி குன்றிய மகனின் போலீஸ் கனவை ஒருநாள் மட்டும் நனவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ராஜீவின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஸ்டீபன் ஒருநாள் போலீஸாக இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு சென்னை கமிஷனர் உத்தரவிட்டார். இதன்படி உதவி கமிஷனர் வின்செண்ட் ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் ஆகியோர் ஸ்டீபனின் இல்லத்திற்கு வந்து அவருக்கு இரண்டு ஸ்டார்கள் பொருத்தப்பட்ட போலீஸ் சீருடையை அளித்தனர். மேலும் அவரை சென்னை அசோக்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிலமணி நேரம் சப்-இன்ஸ்பெக்டர் நாற்காலியிலும் உட்கார வைத்தனர். இதனால் ஸ்டீபனின் கனவு நிறைவேறியது.
அதுமட்டுமின்றி அன்றைய தினம் போலீஸ் வாகனத்தில் ரோந்துப்பணியிலும் ஸ்டீபன் கலந்து கொண்டார். மகனின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு ராஜீவன் குடும்பத்தினர் தனது நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com