21 அரிவாள் மீது நடந்தவாறே சாமியார் கொடுத்த அருள்வாக்கு!!!
- IndiaGlitz, [Tuesday,February 25 2020]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் உள்ள கருப்பன்ன சாமி கோவிலின் 65 ஆம் ஆண்டு கொடை விழா ஞாயிற்றுக் கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சாமியார் ஒருவர் 21 அரிவாள்களை கிடைமட்டமாக நிறுத்தி வைத்து அதன் மீது நடந்து சென்றவாறே அருள்வாக்குக் கூறியிருக்கிறார். ஒரு தடவை இரண்டு தடவை அல்ல 68 தடவை என்பது தான் ஆச்சரியத்தை வரவைத்துள்ளது. மேலும் அரிவாளின் மீது நடந்து செல்லும் போது குழந்தைகளையும் சுமந்தவாறே குறி சொல்லியிருக்கிறார்.
சின்ன சாமி என்பவர் அந்த கோவிலில் 65 ஆவது ஆண்டு சிறப்பை முன்னிட்டு இப்படி குறி கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த விழாவில் 68 கிலோ மிளகாய் தூளைக் கரைத்து இவருக்கு அபிஷேகமும் செய்யப் பட்டது.
கருப்பச் சாமி கோவிலில் முன்னதாக பல்வேறு பொருட்களைக் கொண்டு பூஜையும் நடத்தப் பட்டது. இதில் 21 பொங்கல் வைத்தல், 21 அக்னி சட்டி ஊர்வலம் என்று எண்ணிக்கையினை அளவாகக் கொண்டு நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது இந்தக் கொடை திருவிழாவில் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.