கப்பலில் கொரோனா பயணிகள்... சிகிச்சைக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கும் ட்ரம்ப்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவி வருகிறது. கொரோனா பற்றி மக்களிடையே தேவையற்ற அச்சம் பரவி வருவது குறைக்க வேண்டும் என்றாலும் வைரஸை குணப்படுத்த, கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறி வருவது உண்மைதான்.
உலகம் முழுக்க 1,02,243 பேர் இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையானது 3,497 ஆக உள்ளது. குணமாகி வீடு திரும்பியோர் 57,658 ஆகும். இந்நிலையில் அமெரிக்காவில் நுழைய ஒரு பயணிகள் கப்பல் அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்டது. அந்தக் கப்பலில் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் துணி ஜனாதிபதி மைக் பென்ஸ் உறுதி செய்துள்ளார். 46 பேருக்கு மட்டுமே செய்த ஆய்வில் 23 பேர் தோற்றோடு உள்ளனர். மொத்தம் கப்பலில் 3500 பயணிகள் இருப்பதால் முடிவு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
கப்பலில் மருத்துவ பரிசோதனை நடத்த கருவியானது ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டது. எல்லாப் பயணிகளுக்கும் பரிசோதனை நடைபெறும். மேலும் கப்பலானது சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ள வணிகம் நடைபெறாத துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் நோயாளிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
ஆனால்.. அதிபர் ட்ரம்ப் இதற்கு அனுமதி வழங்கமாட்டார் என தெரிகிறது. முகாமை பார்வையிட வந்திருந்த ட்ரம்ப்பிடம் கப்பல் பற்றி கேட்கப்பட்ட போது "அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கப்பலால் இரட்டிப்பாக நான் விரும்பவில்லை" என தெரிவித்திருந்தார். எனினும் அதிகாரிகள் பலரும் பாதிக்கப்பட்டிருப்போர் கப்பலிலேயே வைத்திருப்பது நல்லதில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments