2026ன் முதல்வர் வேட்பாளர் விஜய், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்: ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

2026 ஆம் ஆண்டின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்றும் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் அவ்வப்போது அரசியல் கலந்த போஸ்டரை வெளியிட்டு வருவார்கள் என்பதும் குறிப்பாக மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் அனைவரின் கவனத்தை பெறும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்யை அரசியலுக்கு வரவழைக்கும் விதத்தில் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் 2026 ஆம் ஆண்டில் தளபதி விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்ததாக ஒரு தகவல் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற 'அந்தகன்' பாடல்: சித் ஸ்ரீராமுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய நிலையில் அந்த பாடலுக்கு 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

நள்ளிரவில் சினிமாவுக்கு சென்ற பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது!

பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த

'வலிமை' படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான 'வலிமை'  திரைப்படத்தின் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'வலிமை' வசூல் உண்மையாகவே ரூ.200 கோடியா? போனிகபூர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரி குவித்தது என தகவல் வெளியானது. இந்த படம் 5  நாட்களில் 100 கோடி ரூபாய்

நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு முக்கிய பதவி: ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது என்பதும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணை