close
Choose your channels

இந்த ஆண்டு தீபாவளிக்கு 4 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? பின்வாங்குவது எத்தனை?

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும் தீபாவளிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் எத்தனை படங்கள் பின்வாங்குகின்றன? எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகின்றன? என்பது குறித்து தெரிய வரும்.

தற்போதைய நிலையில் தீபாவளி தினத்தில் வெளியிட அஜித்தின் ’விடாமுயற்சி’ சூர்யாவின் ’கங்குவா’ பிரதீப் ரங்கநாதன் நடித்த ’எல்ஐசி’ மற்றும் கவின் நடித்த ’கிஸ்’ ஆகிய நான்கு படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால் ’விடாமுயற்சி’ மற்றும் ’கங்குவா’ இரண்டுமே மாஸ் நடிகர்களின் படங்கள் என்பதால் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதால் ’எல்ஐசி’ மற்றும் ’கிஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளுமா? அல்லது கடைசி நேரத்தில் பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை தீபாவளிக்குள் ’விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகவில்லை என்றால் ’எல்ஐசி’ மற்றும் ’கிஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக வாய்ப்புள்ளன. தீபாவளிக்கு இன்னும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இருப்பதால் இன்னும் ஒரு சில மாதங்கள் கழிந்த பின்னரே தீபாவளிக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறித்து சரியான தகவல் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.