2024 பாராளுமன்ற தேர்தல்.. திரையுலகினர்களுக்கு கிடைத்த வெற்றியும் தோல்வியும்..!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஒரு சில திரையுலக பிரபலங்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் சிலர் வெற்றி முகமாகவும் சிலர் தோல்வி முகத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான கேரளாவில் நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றார். கேரளாவில் வெற்றி பெற்ற முதல் பாஜக வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

அதேபோல் ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா தோல்வி அடைந்தார். அவர் மட்டுமின்றி அவருடைய கட்சியும் படுதோல்வி அடைந்தது என்பதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் அங்கு வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிட்ட நிலையில் அங்கு அவர் வெற்றி முகத்தில் உள்ளார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி பாஜக வேட்பாளராக மதுரா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், அவருடைய கட்சியும் நல்ல வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தோல்வி என்றாலும் அரசியல் பயணம் தொடரும்.. நடிகை ராதிகா தெரிவித்த நன்றி..!

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்ற நிலையில் தோல்வி அடைந்தாலும் தனது சமூகப் பணி மற்றும் மக்கள் நல பணி தொடரும்

ஒரே படத்தில் ரஜினியும் என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்கிறார்களா? டபுள் மாஸ் படமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா இருவரும் தனித்தனியாக நடித்தாலே அந்த படங்கள் மாஸ் படங்களாக இருக்கும் என்ற நிலையில் தற்போது ஒரு படத்தில்

'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. அப்ப 'விடாமுயற்சி' என்ன ஆச்சு?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இப்போது வரை அந்த படத்தின் படப்பிடிப்பு 60% வரை தான் முடிந்திருப்பதாக

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!  கமல்ஹாசன் அறிக்கை..!

நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட இந்தியா கூட்டணிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு

வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு.. அவரை விட குறைவாக 24 வேட்பாளர்கள்..!

நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் வாங்கிய வாக்குகள் குறித்த விவரங்களும், அவரைவிட குறைவாக 24 வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.