2024ன் அதிக ஓப்பனிங் வசூல்.. 'மகாராஜா' தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் ‘மகாராஜா’ திரைப்படம் தான் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 10 கோடி என்று கூறப்பட்ட நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாள் என்பதால் அதைவிட அதிகமாக வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய முதல் வார ஓப்பனிங் வசூல் 32.6 கோடி என தயாரிப்பு நிறுவனம் ஃபேஷன் ஸ்டுடியோ சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் முதல் வார இறுதி அதிக வசூல் இந்த படம் தான் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ள போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மூன்றே நாளில் 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இந்த படம் 50 கோடி ரூபாயை மிக எளிதில் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Maharaja shatters box office records by being the highest ever opening weekend collection for a Tamil film in 2024 🔥#BlockbusterMaharaja#MakkalSelvan @VijaySethuOffl
— Passion Studios (@PassionStudios_) June 17, 2024
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB… pic.twitter.com/FqX1nv80PW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com