சிம்ம ராசிக்கு பதவி உயர்வு, செல்வ வளர்ச்சி தரும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் குறிப்பாக சிம்ம ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

சிம்ம ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் நற்செய்தி. இதுவரை 9ம் இடத்தில் இருந்த குரு பகவான், 10ம் இடத்திற்கு வருவது அவர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் என்கிறார் ஜோதிடர். 10ம் இடத்திற்கு குரு பெயர்ச்சி நடப்பது பதவி இழப்பு என்ற பொதுவான கருத்தை ஜோதிடர் மறுக்கிறார். இருப்பினும், வேலை, தொழில் துறையில் கவனமும் உழைப்பும் தேவைப்படும் என்கிறார். அடுத்த மூன்று வருடங்கள் வரை சில சிறு சிறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு அஷ்டம சனி தாக்கத்தை தவிர்க்கும் அமைப்பு இருப்பதால் வருமானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும், வீடு, மனை வாங்கும் யோகம் இந்த ஆண்டு சிம்ம ராசி காரர்களுக்கு அமைந்துள்ளது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றாலும், நிலம், வீடு போன்ற சொத்துக்கள் வாங்க அது உதவும்.

சிம்ம ராசி காரர்களுக்கு இந்த ஆண்டு வாகன யோகமும் இருப்பதாக ஜோதிடர் கூறுகிறார். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்க இந்த குரு பெயர்ச்சி துணைபுரியும். வேலை மாற்றத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஜோதிடர் அறிவுறுத்துகிறார்.

ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படலாம் என்றாலும், குடும்ப வாழ்க்கையில் சுகமும், சந்தோஷமும் நிலவும். வெளிநாட்டில் இருக்கும் சிம்ம ராசி காரர்கள் இந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

சிம்ம ராசிக்கான முழுமையான குரு பெயர்ச்சி பலன்களை அறிய ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் உள்ள ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்களின் பேட்டியை காணலாம்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

 

 

More News

கடக ராசிக்கு கஷ்டத்தை தணிக்கும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக கடக ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

மிதுன ராசிக்கு லாபம் தரும், கனவுகள் நிறைவேறும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக மிதுன ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் மாற்றங்கள் நிறைந்த குரு பெயர்ச்சி பலன்கள்!

2024 மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்: தியாகராஜனின் வாழ்க்கை வரலாறு

பிரபல நடிகர் தியாகராஜன்'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் நான் இளம் வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து ஒரு பிஸ்னஸ் மேன் ஆனேன்.

மனைவி ப்ரியா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ஜாலி கொண்டாட்டத்தில் அட்லி.. அப்படி என்ன விசேஷம்?

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவி ப்ரியா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட சிலருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.