2023ஆம் ஆண்டின் கடைசி நேரத்தில் சமந்தாவின் தரமான செயல்.. செம்ம ஃபிட் ஆகிட்டாங்க போல..!

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் 2023 ஆம் ஆண்டின் கடைசி வொர்க் அவுட் என்று பதிவு செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக அவர் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளார் என்பதும் இருப்பினும் அவர் நடித்த ’சாகுந்தலம்’ மற்றும் ’குஷி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ’குஷி’ நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது உடல்நிலை பூரண குணம் ஆகியவுடன் மீண்டும் அவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை சமந்தா அதிக எடையை கொண்ட பளு தூக்கும் காட்சிகளை பார்க்கும் போது அவர் முழுமையாக உடல் நிலையில் ஃபிட் ஆகிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.



எனவே 2024ஆம் ஆண்டு அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த செய்திகள் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.