2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
2023ஆம் ஆண்டு சினிமா துறைக்கு நல்ல ஆண்டு என்று சொல்லலாம். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ’வாரிசு’ ’துணிவு’, ‘பத்து தல’ ’விடுதலை’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் வாரி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 15 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் 2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’ என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
The Chola flag flies high!#PS2 is the highest-grossing Tamil film of the year!
— Lyca Productions (@LycaProductions) May 12, 2023
Book your tickets now for the blockbuster #PS2!
🔗 https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3 #PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions… pic.twitter.com/g0YyqkoaQa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments