1967ல் அண்ணாவின் ஆட்சி, 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி: ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
1967இல் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி என்றும் 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி என்றும் மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக என்ற இரு மாபெரும் கூட்டணியை அடுத்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இந்த தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் விஜய் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் டெல்லியில் இருந்து வழக்கறிஞர் ஒருவரை வரவழைத்து தனிக் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் திடீரென மதுரை விஜய் ரசிகர்கள் மதுரையின் முக்கிய இடங்களில் பரபரப்பான போஸ்டர் ஒன்றை அடித்து ஒட்டியுள்ளனர். அதில் 1967ல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி என்றும் 2021ல் தளபதி விஜய் அண்ணாவின் ஆட்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போஸ்டர் மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் விஜய், அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் களமிறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments