2021 தமிழக சட்டமன்றதேர்தலில் களமிறங்கிய அரசியில் வாரிசுகள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
வாரிசு அரசியல் என்பது வாழையடிவாழையாக நடந்துவருவது நமக்கு தெரிந்த ஒன்னுதான்.
அந்த வகையில் எந்தெந்த கட்சியில் உள்ள அரசியில் தலைகளின் வாரிசுகள், இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார் என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க.
• திமுகவில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்தவர் தான் கலைஞரின் ஆஸ்தான நண்பரான மு.நாகநாதன். இவர் திராவிட இயக்கத்தில் உள்ள பெரியார், அண்ணா,கருணாநிதி உள்ளிட்டோருடன் மிக நெருக்கமாக இருந்தவர். தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் இவரின் மகன் டாக்டர் எழிலன் களம் இறங்குகிறார். ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம்,எட்டுவழிச்சாலை, நெடுவாசல்,நீட் எதிர்ப்பு உள்ளிட்ட பல சமூக பிரச்சனைகளில் களம் இறங்கி வேலை செய்து வந்தவர் தான் இவர். மேலும் "இளைஞர் இயக்கம்" என்ற அமைப்பையும் நிறுவி வருகின்றார்.
• மறைந்த தலைவர் கருணாநிதியின் மகனும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான முக.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஸ்டாலினின் மகனும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான நடிகர் உதயநிதி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
• 2019-ல் நடந்த கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட எச்.வசந்தகுமார், அத்தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால் கடந்த ஆண்டு அவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.இவர் இறந்ததால் தமிழக சட்டமன்ற தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது. இதில் வசந்தகுமாரின் -ன் மகன் நடிகர் விஜய்வசந்த் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
• திமுக பொதுச்செயலாளராக 43 வருடங்கள் இருந்து மறைந்த க.அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு, திமுகவில் வர்த்தகர் அணி இணைச் செயலாளராக இடம் கொடுக்கப்பட்டிருந்தது. இவர் இத்தேர்தலில் திமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
• காங்கிரஸ் கட்சி சார்பாக திருநாவுக்கரசரின் மகனான, டி.எஸ்.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
• காங்கிரஸ் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஈ.வே.ரா திருமகன் களம் இறங்க உள்ளார். இளங்கோவன் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின், பேரன் ஆவார்.
• திமுக சார்பாக மன்னார்குடி தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா போட்டியிடுகிறார்.
• விஜயகாந்தின் மகன் விஜய பிரகாரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்-ன் தம்பி சுதீஷ் போட்டியிட இருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இவர்களும் போட்டியிடவில்லை.
• காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கும், திமுக தங்கள் வாரிசுகள் மற்றும் சொந்தங்களுக்கு சுமார் 17 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.பாஜக,பாமக மற்றும் அதிமுக கட்சிகளில் அரசியல் வாரிசுகளுக்கு இம்முறை வாய்ப்பில்லை என்பதை நாம் குறிப்பிட்டு சொல்லலாம்.
இதில் யார் வெற்றிவாகை சூடப்போகிறார்கள்,அரசியலில் புது மாற்றத்தை கொண்டுவரப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் மக்களே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments