2021-க்கான நோபல் பரிசு… மருத்துவத் துறைக்கான அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,October 05 2021]
நடப்பு(2021) ஆண்டிற்கான நோபல் பரிசு இன்று முதல் வரும் 11 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் கூட்டாகப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
புது கண்டுபிடிப்புகளையும் உலக விஞ்ஞானிகளையும் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டு ஸ்டாஹோமில் இருந்து அறிவிக்கப்படும் இந்த பரிசு பட்டியலில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி எனும் 6 துறைகள் அடங்கியுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும்.
தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளை, நோபல் பரிசுக்குழு அறிவிக்கத் துவங்கியுள்ளது. அதில் முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் படாபோஷியன் இருவரும் கூட்டாக பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்தற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை பரிட்டன் மற்றும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.